செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி, செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அளித்த புகாரின்படி சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆபாசமாக புகைப்படத்தை சித்தரித்து (மார்பிங்) வெளியிட்ட நபரை கைது செய்ய திரு.சிவகுமார் ஆய்வாளர் இணையவெளி குற்ற பிரிவு காவல்நிலையம் அவர்களின் தலைமையிலான திரு.தனசேகரன் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் திரு.டேனியல்,திரு. சுதாகர்,காவலர் திரு.பாரத் தனிப்படையினர் குற்றவாளியான முனீஸ்வரன் 33, என்பவரை கைது செய்து நீதிமன்றகாவலுக்கு அனுப்பினர்…
மேலும்,பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுகொள்ளபடுகிறது..
சைபர் க்ரைம் பற்றிய புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற வலைத்தளத்தில் தங்கள் புகார்களை பதிவிடவும்…
சைபர் குற்றவாளிகள் மூலம் ஏற்பட்ட நிதியிழப்புகளுக்கு 1930 / 155260 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்..