தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மநாபமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் அருண்குமார் (28). என்பவர் கையில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் புகைப்படம் எடுத்து, அதன் பின்னணியில் சினிமா பாடலை ஒலிக்க வைத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் மேற்படி குற்றவாளி அருண்குமாரை கைது செய்து அவரிடமிருந்த அரிவாள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது போன்று பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, ஜாதி, மத மோதலை தூண்டும் வகையிலோ, கையில் ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ அல்லது சட்டத்திற்கு புறம்பான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மற்றும் வாகனங்களில் வீலிங் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் எச்சரித்துள்ளார்.