மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் பணப்பிரச்சனையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை மார்ச் 3 .ஜெய்ஹிந்ததுபுரத்தில் பணம் பிரச்சினையால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஜெய்ஹிந்துபுரம் ராமமூர்த்தி நகர் 4வது தெருவில் சேர்ந்தவர் சுந்தரி 54. இவருக்கு பணப் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர் கொடுத்த புகாரில் ஜெய்ஹிந்துபுரம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*******
செல்லூர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டு 2 பேர் கைது
மதுரை மார்ச் 3 செல்லூர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர் .மதுரை ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் கார்த்தி 27 .இவர் செல்லூர்பாலம்ஸ்டேசன் ரோட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மய்யத்தில் நான்காயிரம்ரூபாய்மதிப்புள்ளஇரும்பு தகடுகள்திருடுபோய்விட்டன. இதுதொடர்பாக அதன் நிர்வாகி கார்த்திக் செல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ஜம்புரோபுரம் மார்க்கெட்டை சேர்ந்த் அழகர் 60, பந்தல்குடிஏழாவது தெருவைச் சேர்ந்த மாயக்கண்ணன் 42 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
*********
சிலைமானில் குடிப்பழக்கத்தால் வயிற்று வலி காரணமாக லோடுமேன் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை மார்ச் 3 சிலைமான் கல்மேடு பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு மகன் மணிகண்டன்25. இவர் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது .இதன் காரணமாக தொடர்ந்து வயிற்று வலியும் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை பெற்றும்அவருக்கு குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து போன மணிகண்டன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவருடைய அப்பா சிங்காரவேலு கொடுத்த புகாரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
*********
மதுரை அருகே மல்லிகைச் செடிக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து பலி
மதுரை மார்ச் 3 மதுரை அருகே மல்லிகைத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து சிறுவன் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அருகே பணமூப்பன் பட்டியைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் மகன் ஆண்டிச்சாமி 10. இவர்கள் வீட்டில் மல்லிகைப்பூ தோட்டத்தில் சிறுவன் ஆண்டிச்சாமியும் அவனுடைய அம்மாவும் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது பாம்பு கடித்து மயங்கி விழுந்தான். அவனை உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனில்லாமல் சிறுவன் ஆண்டிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தான் .இவனது சாவு குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*********/
மதுரை அருகே வெடி பொருட்களுடன் வாலிபர் கைது
மதுரை மார்ச் 3 மதுரை அருகேவெடிபொருட்கள்பதுக்கிவைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மதுரை அருகே காஞ்சாபுரத்தை சேர்ந்தவர் மாரிசாமி 36. இவரது தென்னந்தோப்பில் வெடி பொருட்கள் பதுக்கிவைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.பேரையூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியபோது அங்கு வெடிபொருட்கள் மறைத்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து பதுக்கி வைத்திருந்த வாலிபர் மாரி இச்ச்மியை போலீசார் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி