2 நபர்கள் T-6 ஆவடி காவல் குழுவினரால் கைது
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” தொடர்ச்சியாக, , திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.சீனிவாசன் மற்றும் T-6 ஆவடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், 07.03.2021 அன்று ஆவடி, CTH ரோடு, ஆஞ்சநேயர் கோயில் அருகில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா எடுத்து வந்த 1.கோகுல் (எ) கோகுலகிருஷ்ணன், வ/46, அன்னனூர், 2.ராஜேஷ், வ/25, ஆவடி, 3.குமரவேல், வ/27, , ஆவடி ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடருந்து 13 கிலோ கஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாதவரம் காவல் நிலைய ரோந்து காவலர்களால் மாதவரம் பகுதியில் வீடு புகுந்து திருடியவர் கைது.
M-1 மாதவரம் காவல் நிலைய தலைமைக் காவலர் ஶ்ரீதர் (த.கா.26753) மற்றும் முதல்நிலைக் காவலர் சுரேஷ் (மு.நி.கா.29938) ஆகியோர் இன்று 08.3.2021 ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாலை மாதவரம், ராதாகிருஷ்ணன் ஹாஸ்டல் அருகே மறைந்திருந்த ஒரு நபர் காவலர்களை கண்டதும், அவர் வைத்திருந்த பையை போட்டுவிட்டு ஓடினார். உடனே, காவலர்கள் அந்த நபரை துரத்திச் சென்று பிடித்து, M-1 மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். M-1 மாதவரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் சுதாகர், வ/24, வேலூர் மாவட்டம் என்பதும் சற்று முன்பு, மாதவரம், பொன்னியம்மன்மேடு, பகுயிலுள்ள ப்ளேவியன் டிக்ரூஸ் என்பவரது வீட்டில் மேற்படி பணம் மற்றும் செல்போன்கள் திருடியதும் ஒப்புக் கொண்டார். அதன்பேரில் M-1 மாதவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எதிரி சுதாகர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பணம் ரூ.4,63,000/-, 3 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
துணிக்கடையை எரித்த 5 நபர்கள் F – 5 சூளைமேடு காவல் குழுவினரால் கைது
சென்னை , தலைமேட்டைச் சேர்ந்த பெட்ராம் ஸ்வாரிஸ் வ/53., என்பவர் , சௌராஷ்டிரா நகர் 1 வது தெருவில் Federick Fashions என்ற துணிக்கடையை வாடகைக்கு நடத்தி வந்தார் . இந்நிலையில் 04.01.2021 அன்று பெட்ராம் ஸ்வாரிஸின் துணிக்கடை எரிந்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் , சம்பவ இடத்திற்கு சென்றபோது , தீயணைப்பு படையினர் மற்றும் காவல் குழுவினர் தீயை அணைத்துக் கொண்டிருந்தனர் . இது தொடர்பாக பெட்ராம் ஸ்வாரிஸ் F – 5 சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் F – 5 சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வாடகை தகராறு காரணமாக கடையை தீவைத்து எரித்த 1.ராஜேஷ் , வ/37சூளைமேடு , 2.ராமராஜ் வ/31 சூளைமேடு , 3.ஆனந்தன் வ/31 சூளைமேடு, 4.பாலாஜி வ/31 சூளைமேடு, 5.சந்துரு ( எ ) சந்திரகுமார் வ/21 , சூளைமேடு ஆகிய 5 நபர்களை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்