திருநெல்வேலி: 75 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு தினம் நவம்பர் 26 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினரால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை கீழ்க்கண்டவாறு வாசிக்கப்பட்டது. “இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை [இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயச்சார்பின்மையும், மக்களாட்சிமுறையும், அமைந்ததொரு குடியரசாக நிறுவவும்], அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல் நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படிநிலை, வாய்ப்புநலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும் தனி மனிதனின் மாண்பு, [நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு] இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையராய், நம்முடைய அரசமைப்பு பேரவையில், 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று, ஈங்கியதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம்” என இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை வாசிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்