தூத்துக்குடி : கடந்த (22.09.2022), அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னக்கண்ணுபுரம் பகுதியில், உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் வைத்து, தூத்துக்குடி அண்ணாநகர் மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (25), என்பவரை மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கம்பு மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தையா மகன் ராம்தேவன் (20), என்பவரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளியான ராம்தேவன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம், அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப, அவர்கள் தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தையா மகன் ராம்தேவன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில், சம்மந்தப்பட்ட 13 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் உட்பட 216 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.