தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் இண்டூர், பகுதியை சேர்ந்த 17 வயது, மாணவி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்து, மாணவி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோ, இண்டூர் காவல் துறையில், புகார் செய்தனர். அதன்பேரில் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அப்போது அதகபாடி பகுதியை, சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர், மாணவியை திருப்பூருக்கு, கடத்திச்சென்று, பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர், மாணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்

க.மோகன்தாஸ்.
 
                                











 
			 
		    



