கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க போக்குவரத்து காவலர்களுக்கு உறுதுணையாக டிராபிக் வார்டன் ஆர்கனைசேஷன் 2009இல் ஓசூர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் முயற்சியில் தொழிற்சாலையில் பணிபுரியும் நபர்களை வைத்து தொடங்கப்பட்டது. அதில் தற்பொழுது 99 டிராபிக் வார்டன்கள் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டு, காலை, மாலை நேரங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதில் 79 டிராபிக் வார்டன்கள் மற்றும் 20 பயிற்சி டிராபிக் வார்டன்கள் அடங்குவார்கள், மேலும் ஒரு வருடங்களுக்கு மேலாக ஓசூரில் சிப்காட் மேம்பாலம் மற்றும் தேன்கனிக்கோட்டை ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலம் வேலை நடைபெற்று வந்ததால், தேன்கனிக்கோட்டை சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. அப்பொழுது அரசு மற்றும் தனியார் பேருந்து, லாரிகள், இதர வாகனங்கள் அனைத்தும் தளி சாலையில் திருப்பி விடப்பட்டது. சிப்காட் மற்றும் தளி ரயில்வே கேட் அருகில் அதிகப்படியான வாகன நெரிசல்கள் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், அதில் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும்,ஓ சூர் துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில், ஓசூர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசனிடம் மாத சம்பளத்துடன் முழு நேர டிராபிக் வார்டன்களை அமைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
சிப்காட் பகுதியில் ஏற்கனவே மூன்று டிராபிக் வார்டன்கள் மாத சம்பளத்துடன் வேலை செய்து வந்த நிலையில், மேலும் 10 டிராபிக் வார்டன்கள் ஓசூர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் அமர்த்துவதாக உறுதியளிக்கப்பட்டு, தளி ரயில்வே கேட் மற்றும் சிப்காட் பகுதியில் பணியமர்த்தப்பட்டார்கள் (இதில் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் மற்றும் மகரிஷி ஸ்கூல் உதவ முன் வந்தார்கள்) இதில் 13 நபர்களை தவிர மற்ற 99 டிராபிக் வார்டன் தன்னார்வலர்களாக மட்டுமே பணி செய்து வந்து கொண்டிருக்கிறார்கள், இவர்களுக்கு எந்த ஊதியமும் வழங்கப்பட மாட்டாது. இதனை தலைமை போக்குவரத்து பாதுகாவலர் திரு. முத்துசாமி மேற்பார்வையில் நடந்து கொண்டிருக்கிறது. இவர்களின் தன்னார்வ தொண்டை பாராட்டும் வகையில் வருடாந்திர கூட்டம் ஓசூர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷனில் நடத்தப்பட்டது. இதில் 10 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. இதில் , எம் எல் ஏ திரு பிரகாஷ் மற்றும் மேயர் திரு சத்யா அவர்களுடன் ஓசூர் துணை கண்காணிப்பாளர் திரு பாபு பிரசாந்த் மற்றும் ஓசூர் சிப்காட் இன்ஸ்பெக்டர் திரு பிரகாஷ், ஓசூர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் தலைவர் திரு சுந்தரையா, அரவிந்த் மற்றும் அருளானந்தன் மற்றும் காவேரி ஹாஸ்பிடல் டாக்டர் விஜய் பாஸ்கர் உடன் இருந்தார்கள்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்