திண்டுக்கல்: திண்டுக்கல் பழனியைச் சேர்ந்த துரையரசு 20. என்பவருக்கு ஆன்லைன் மூலம் டிராக்டர் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.85,000/- பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், திண்டுக்கல் பழனியைச் சேர்ந்த விக்னேஷ்வர் 19. என்பவருக்கு OLX மூலம் மொபைல் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.14,000/- பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த நிஷாந்த் 24. என்பவருக்கு OLX மூலம் மொபைல் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.25,000/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் மனுதாரர்கள் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் உத்தரவுபடி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து மூன்று நபர்களிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.1,24,000/- பணத்தை மீட்டு இன்று 13.12.2022 திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ரூபேஷ் குமார் மீனா. இ.கா.ப அவர்கள் மனுதாரர்களிடம் ரூ.1,24,000/- பணத்தை ஒப்படைத்தார்கள்.