திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது பிரபலமான நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு online மூலம் மோசடி செய்யப்படுவதாக தெரிய வருகிறது. அடையாளம் தெரியாத நபர்கள் Telegram, whatsapp, face book, போன்ற இணையதள வாயிலாக தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நிறுவனத்தின் சார்பில் பேசுவதாகவும், தங்களது நிறுவனத்தில் உள்ள Property promoters -க்கு Review கொடுத்து Task செய்தால் ஆன்லைன் மூலமாக அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி சிறிய தொகையை முதலீடு செய்ய வைத்து அதற்கு குறைந்த இலாப பணத்தை அனுப்பி வைக்கும்.
இதை நம்பி பொதுமக்கள் செய்யும் Task தொகையை அவர்களின் website account-ற்கு பணம் அனுப்பியது போல் காண்பித்து பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து ஏமாற்றி வருவதாக தெரிய வருகிறது. எனவே சமூக வலைத்தளங்களில் வரும் online part time job அல்லது Property Promoters Review என்பது போன்ற விளம்பரங்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற பண மோசடி நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் www. Cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் பதிவு செய்யுமாறு மாவட்ட காவல்துறை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்