அரியலூர் : அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக
இணையதள உதவியுடன் வெளிநாட்டு நம்பரில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 2,25,000 ரூபாய் பணத்தை ஏமாற்றிய சென்னையை சேர்ந்த மகேஷ் என்பவரை அரியலூர் சைபர் கிரைம் காவல்துறையினர் மூன்றே மாதத்தில் பிடித்தனர்.மேலும் இரண்டு லட்சம் ரூபாய் பணம் மற்றும் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டது.
அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.P.வாணி அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு.மணிகண்டன், திரு.சிவனேசன் (தொழில்நுட்பம்), மற்றும் காவலர்கள் திரு. சுதாகர், திரு.ரஞ்சித் குமார் ஆகியோர் கொண்ட சிறப்புக்குழுயை அரியலூர் மாவட்ட கால் கண்காணிப்பாளர்கள் பாராட்டினார்கள்.