கடலூர்: தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில், இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர் திரு. ஆர்.அருளரசு இ.கா.ப., மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் இ.கா.ப. ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இணையவழி விளையாட்டுகள் மூலம் ஏற்படும் மனநலம், கல்வி, குடும்ப மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டு, இத்தகைய பழக்கங்களுக்கு அடிமையாவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் பொறுப்புடன் இணையத்தை பயன்படுத்தி, கல்வி மற்றும் திறன் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
















