திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., உத்தரவின் படி திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு சமூக வலைதளங்களில் உள்ள ஷாப்பிங் நிறுவனங்களின் பெயரில் மோசடி, ATM கார்டு மற்றும் OTP, சமூக வலைத்தளத்தின் மூலம் அறிமுகம் இல்லாத நபர்கள் தொடர்பு, வேலைவாய்ப்பு மோசடி மற்றும் அனைத்து இணையவழி குற்றங்கள் குறித்தும், சைபர் கிரைம் காவல்துறையினரின் இலவச எண்:1930 பயன்படுத்துவது பற்றியும், https://cybercrime.gov.in/ என்ற இணையதளம் பற்றியும் வாசக அட்டைகள் வழங்கி திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர், சண்முகவடிவு தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்