திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவின் பேரில், பொதுமக்களிடம் இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகர காவல் துணை ஆணையர்கள், வினோத் சாந்தாராம், விஜயகுமார் மேற்பார்வையில் பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மாநகர சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர், சுவாதிகா, மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் பாளையங்கோட்டை சாந்தி நகரில் (18.03.26) அன்று பொதுமக்களை சந்தித்து இணையவழி குற்றங்கள் மற்றும் அதில் சிக்காமல் தப்பிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், இணையவழி மோசடி தொடர்பான புகார்களை கட்டணமில்லா எண். 1930 அல்லது இணையதளம் மூலமாக அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















