திருவண்ணாமலை: தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.சஞ்சய்குமார், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டாலின், சைபர் அரங்கம், சென்னை, அவர்கள் அறிவுறுத்தலின்படியும், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (21.03.2024) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில், இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.M.பழனி அவர்கள் தலைமையில், கல்லூரி முதல்வர் Dr.K.ஆனந்தராஜ் அவர்கள் முன்னிலையில் “Recent Trends in Cyber Crime & Its Prevention” என்ற தலைப்பில் இணையவழி குற்றங்கள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. உடன் மாவட்ட குற்ற ஆவன காப்பகம் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.T.கார்த்திகா அவர்கள் (பொறுப்பு) சைபர் கிரைம் காவல் நிலையம்), சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் (Technical) திரு.T.செந்தில்குமார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.R.மணிமாறன் மற்றும் சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் உடனிருந்தனர்.