திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. உத்தரவின் படி, காவல் துணை ஆணையர் S.விஜயகுமார் (மேற்கு) மேற்பார்வையில், இணையவழி குற்றங்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடத்தப்பட்டு வரும் நிலையில் (23.02.2026) அன்று திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர், செல்வி சுவாதிகா மற்றும் சைபர் கிரைம் காவல் துறையினர் டவுண் சாப்டர் பள்ளியில் மாணவ, மாணவர்களிடம், சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாள்வது , ATM கார்டு மற்றும் OTP குறித்தும், சமூக வலைத்தளத்தின் மூலம் அறிமுகம் இல்லாத நபர்கள் தொடர்பு கொண்டால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது, சமூக வலைதளம் மூலம் நடைபெற்று வரும் வேலைவாய்ப்பு மோசடி, பண மோசடி நடைபெற்றால் உடனடியாக சைபர் கிரைம் இலவச உதவி எண்:1930 அல்லது https://cybercrime.gov.in/ புகார் அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















