திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை டிசம்பர் மாதம் 2022-ம் ஆண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக பேசி முதலீடு செய்யுமாறு கூறியதை நம்பி ரூ1,20,000 பணத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அவர்கள் முறைகேடாக தன்னிடமிருந்து பணம் பெற்றதை அறிந்த பாதிக்கப்பட்ட நபர் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் உத்தரவுப்படி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.1,20,000/- பணத்தை மீட்டனர் இதையடுத்து (17.05.2023) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் பாதிக்கப்பட்ட நபரிடம் ரூ.1,20,000/- பணத்தை ஒப்படைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா