திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், எரியோடைச் சேர்ந்த ஆனந்தி (45). என்பவரிடம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.20 இலட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி ஆதார் கார்டு, பான் கார்டு, மற்றும் வங்கி விபரங்களை பெற்றுக்கொண்டு ரூ.2,00,000/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட S.P. பாஸ்கரன் வழிகாட்டுதலின் படியும், சைபர் கிரைம் ADSP.சந்திரன் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் மீனா மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.2,00,000/- பணத்தை மீட்டு இன்று மாவட்ட S.P.பாஸ்கரன், மீட்கப்பட்ட ரூ.2,00,000/- பணத்தை ஆனந்தி அவர்களிடம் ஒப்படைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா