திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ராஜகாபட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (38) என்பவருக்கு ஆன்லைன் மூலம் ரோபோ மென்பொருள் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.1,20,000/- பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக மனுதாரர் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் உத்தரவுப்படி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து மர்ம நபரின் வங்கி கணக்கை முடக்கம் செய்து ரூ.1,20,000/- பணத்தை மீட்டனர். இதையடுத்து (20.12.2022) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் திரு.சுரேஷ்குமார் அவர்களிடம் ரூ.1,20,000/- பணத்தை ஒப்படைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா