திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.11,25,000/- பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில் வேலை தருவதாக கூறி ரூ.11,25,000/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். பிரதீப் வழிகாட்டுதலின் படியும் திண்டுக்கல் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.சந்திரனின் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர். மீனா அவர்கள் மற்றும் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.11,25,000/- பணத்தை மீட்டனர். இதனை அடுத்து அன்று (08.01.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். பிரதீப் மீட்கப்பட்ட ரூ.11,25,000/- பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா