திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., வழிகாட்டுதலின்படி, மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், முருகன் மேற்பார்வையில் முக்கூடலில் உள்ள பாலகன் சரஸ்வதி மகளிர் கலைக் கல்லூரி, மற்றும் முக்கூடல் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஆன்லைன் நிதி மோசடி, பகுதி நேர வேலை மோசடி, டிஜிட்டல் கைது, ஃபெடெக்ஸ் மோசடி, கடன் செயலி மோசடி போன்ற பல்வேறு வகையான மோசடிகள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.
இறுதியாக, அனைவருக்கும் CEIR போர்டல் https://www.ceir.gov.in/ பயன்பாடுகள், சைபர் குற்றப் புகார் போர்டல் (https://cybercrime.gov.in) பற்றி தெளிவுபடுத்தியும், குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், சமூக வலைதளங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றி எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்