திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை கீழ்க்கண்ட இணையதள மோசடி பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையதளத்தில் App (apk file) மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அது தற்பொழுது உங்களது வாட்ஸப் எண்ணிற்க்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள் என ஒரு apk file அல்லது link செய்தி வரும். அந்த லிங்க் ஐ கிளிக் செய்வதன் மூலம் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து அனுப்பலாம் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். நீங்கள் அந்த apk file -ஐ open செய்துவிட்டால் உங்களது போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு, உங்களது வங்கி கணக்கு தொடர்பான விபரங்களை தெரிந்துகொண்டு பண மோசடி செய்து விடுவார்கள்.
எனவே வாட்ஸப்-ல் இது போன்று அறிமுகமில்லாத எண்ணிலிருந்து வரும் புத்தாண்டு வாழ்த்துகளை தவிர்க்க வேண்டும். இது போன்ற பண மோசடி நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்