மதுரை: மதுரை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் முழு ஊரடங்கு காரணமாக பொருளாதாரம்,ஆதரவற்றோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மாத்தூர் அருகே 50 நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென அறிவுரை கூறினார்கள்.