சென்னை : சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் பிரபு, (58), பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை, அகரமேல் பகுதியில், உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.நுகர்வோரிடம் இருந்து, மின் பயன்பாட்டின் தொகைக்கான காசோலை, 66 ஆயிரத்து, 200 ரூபாயை வசூலித்தார். அந்த பணத்தை முறைகேடு செய்தது தொடர்பாக, மத்திய குற்ற பிரிவு காவல் துறையினரால், ஆவண மோசடி பிரிவில் கைது செய்யப்பட்டு சிறையில் , அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கு, பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம்- 1ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின், நேற்று தீர்ப்பு வழங்கினார். பிரபுவுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.