சென்னை | மார்ச் 30, 2026: காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வந்த SSI (R3) திரு. பி. கோபி குமார் அவர்கள், இன்று (30 மார்ச் 2026) அதிகாலை 12:37 மணி அளவில் காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது பணிக்காலத்தில் அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் பணியாற்றிய இவரது மறைவு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ‘போலீஸ் நியூஸ் பிளஸ்’ (Police News Plus) மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா (Newsmedia Association of India) சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
“அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் இறைவனைப் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”


















