கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மது கடத்தலை தடுக்கும் நோக்கில் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் நேரில் சென்று சோதனை மேற்கொண்டார். அப்போது சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலர்களுக்கு மது கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்புடன் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
















