தேனி: போடி நகர் பகுதியில் அதிகமான அளவில் மணல திருடப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எஸ்.ஐ. அருள்பாண்டி தலைமையில் போலீஸார் ரோந்து பணியை மேற்கொண்டனர்.
அப்போது போடி கொட்டகுடி ஆற்றில் 5 சாக்குப் பைகளில் மணலை அள்ளி கொண்டு செல்வதற்காக முயன்றபோது, போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். விசாரணையில் போடி புதூர் பகுதியை சேர்ந்த நாகூர்மீரான் ( 53 ), என்பதும் அனுமதி இன்றி மணல் திருட முயற்சி செய்தது தெரிய வந்தது போடி நகர் போலீசார்கைது செய்தனர்.