கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் பண்ருட்டி பகுதியில் நடைபெற்று வரும் கெடிலம் ஆற்றுத் திருவிழாவினை முன்னிட்டு, அதிவிரைவு காவல் படையினர் சகிதம் பாதுகாப்பு பணிகளை நேரடியாகக் கண்காணித்து வருகிறார். திருவிழா நடைபெறும் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீராகப் பேணப்படுவதையும், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் விழாவில் பங்கேற்கும் வகையில் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, போக்குவரத்து ஒழுங்குமுறை, அவசர நிலைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும், திருவிழா காலம் முழுவதும் காவல்துறையினர் விழிப்புடன் இருந்து பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
















