தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேலபூலனந்தபுரம் முல்லை ஆற்றுப் பகுதியில் இரவு நேரங்களில் மணல் அள்ளப்படுவதாலக சின்னமனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடத்து எஸ் இளங்கோவன், எஸ்எஸ்ஐ ஜெயசீலன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தபோது முல்லை ஆற்றில் இரட்டை மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவரை மடக்கிப் பிடித்து, விசாரணை செய்ததில் சீலையம்பட்டியைச் சேர்ந்த முத்தையா மகன் முத்துராஜ் (27) என்பது தெரியவந்தது. பின்னர் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்துராஜை சிறையில் அடைத்தனர்.