தேனி : நேற்று முன்தினம் தாசில்தார் திரு.அர்ஜுனன், வருவாய்த்துறை துணை வட்டாட்சியர், திரு.முருகன், வி.ஏ.ஓ. திரு.சிவகுமார், ஆகியோருடன் இணைந்து, உத்தமபாளையத்தில் உள்ள முக்கிய இடங்களில் பொதுமக்களிடம் கொரானா பரவலை தடுக்கும் வகையில், முககவசம் அணியச் சொல்லி பொது இடங்களில்விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.
இதேபோல் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து, நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் பஸ் ஒன்று தேனியில் இருந்து வந்தது. இதில் ஏறி அதிகாரிகள் முககவசம் அணிய வலியுறுத்தி பிரச்சாரம் செய்தனர்.
பஸ்ஸில் இருக்கையில் அமர்ந்திருந்த, கம்பத்தைச் சேர்ந்த சுசிகணேசன் (52), மற்றும் ஜெயகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து அதிகாரிகளை திட்டியும், பணிசெய்ய விடாமல் தடுத்தும் அவதூறாக பேசி திட்டியுள்ளனர்.
இதனை அடுத்து உத்தமபாளையம் போலீஸார்க்கு தகவல் தரப்பட்டது. உத்தமபாளையம் எஸ்.ஐ. தினகரன் பாண்டியன் தலைமையில் வந்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.