திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மற்றும் அரசு சித்த மருத்துவ கல்லூரி இணைந்து ஆயுதப்படை மைதானத்தில் மூலிகைத் தோட்டத்தை (10.11.2024) அன்று அமைத்தனா். அரசு சித்த மருத்துவக் கல்லூரி முதல்வா் மலா்விழி மூலிகை செடிகளை வழங்கி, சிறப்பு சித்த மருத்துவ முகாமை தொடக்கி வைத்தாா். மாநகர காவல் துறை நில அபகரிப்பு பிரிவு உதவி ஆணையர், கே.பி.கணேசன் முன்னிலை வகித்தாா். மாநகர ஆயுதப்படை காவல் ஆய்வாளா், மகேஸ்வரி வரவேற்றாா்.
மாதிரி மூலிகை தோட்டத்தில் சித்த மருத்துவ மூலிகைகளான தவசி, முருங்கை, நெல்லி, ஓமவல்லி , அழுகண்ணி, துளசி, தூதுவளை, போன்ற அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் மூலிகை செடிகளை நட்டனா். முகாமில் ஆயுதப்படை காவலா்கள் மற்றும் பயிற்சி காவலா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபச்சுர குடிநீா் மற்றும் நீரழிவு நோய்க்கு சிறப்பாக வழங்கப்பட்டு வரும் சீந்தில் குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்