மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு இன்று 15.05.2024-ம் தேதி காலை செம்பனார்கோயில் காவல் சரகம், மேலையூர் அழகு ஜோதி அகாடமி மேல்நிலைப்பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி K. மீனா அவர்கள் ஏற்பாட்டில் முதற்கட்டமாக 60 ஆயுதப்படை மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் ஆளிநர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில் கலந்து கொண்ட காவல் ஆளிநர்களுக்கு திரு. Dr. அஜித் பிரபு குமரன், DDHS, மயிலாடுதுறை மற்றும் குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இம்முகாமில் திரு. N. ராஜேந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குற்ற பிரிவு I, மயிலாடுதுறை, திரு. T. பாலச்சந்திரன், காவல் ஆய்வாளர், தனிப்பிரிவு, மயிலாடுதுறை, திரு. S. செந்தில்குமார், காவல் ஆய்வாளர், ஆயுதப்படை, மயிலாடுதுறை ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் காவல் ஆளிநர்கள் அவர்களது உடல்நலனை பேணிக்காப்பது தொடர்பான உணவு பழக்க வழக்கங்கள், கொதிக்க வைத்த குடிநீர் அருந்துதல், சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல், மனநலம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.