திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் (10.01.2026) ஆயுதப்படை காவலர்களுக்கான கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரதீப் அவர்கள் பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது, காவலர்களின் உடற்தகுதி, ஒழுக்கம் மற்றும் செயல்திறன் குறித்து ஆய்வு செய்த அவர், பணியில் சுறுசுறுப்பாகவும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணிக்கொண்டும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், ஊர்க்காவல் படையினருக்கும் பயிற்சி வழங்கி, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசர நிலைகளில் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய முறைகள் குறித்து எடுத்துரைத்தார். இந்த பயிற்சி நிகழ்ச்சியில் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















