திண்டுக்கல் : மதுரை பாத்திமா கல்லூரியில் (30.11.2025) ம் தேதி நடைபெற்ற யோகா போட்டியில் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை காவலர் B.சந்தோஷ் ஏக ஹஸ்த புஜாசன ஆசனத்தை தொடர்ந்து 15 நிமிடங்கள் செய்து சாதனை செய்தார். இதை தொடர்ந்து அவருக்கு (ULTIMATE WORLD RECORD) சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (01.12.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், காவலரை நேரில் அழைத்து பாராட்டினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















