திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு கமாண்டோ பயிற்சி பள்ளியில் (14.11.2024) முதல் (28.12.2024) வரை நடைபெற்ற 56 நாட்கள் பயிற்சியில் தென் மண்டல மாவட்டங்களில் இருந்து 63 காவலர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், ராஜு ஒட்டுமொத்த போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் மற்றும் 3 கேடயங்கள் பெற்றுள்ளார். போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர் ராஜுவை (03.01.2025) திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர், பா. மூர்த்தி., இ.கா.ப., திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி, பரிசு வழங்கி கௌரவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்