திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பிரம்மதேசம், மாதா கோவில் தெருவை சேர்ந்த மகேஷ்ராஜமுத்து(45). என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கர முத்து குமார்(45). என்பவருக்கும் இடையே சில வருடத்திற்கு முன்பு கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோத பிரச்சனை காரணமாக (26.10.2024) அன்று மதியம் மகேஷ் ராஜமுத்து வீட்டிற்கு அருகே உள்ள கருப்பசாமி கோவில் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சங்கர முத்து குமார் அவதூறாக பேசி கத்தியால் தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.
இது குறித்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் மகேஷ் ராஜ முத்து அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர், ஆனந்த பாலசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சங்கர முத்துக்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்