திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை பதிவு செய்து பொதுமக்களிடையே பரப்புவோர்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காட்டுசெக்கடி தெருவை சேர்ந்த முகம்மது உசேன் மகன் அப்துல் அஜீஸ்(20). என்பவர் சமூக வலைதளமான Instagram-ல் பிரச்சனையை தூண்டும் வகையில் ஆயுதத்துடன் (அரிவாள்) புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.
இது குறித்து மேலப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து (21.10.2024)ஆம் தேதி வழக்கு பதிவு செய்து அப்துல் அஜிசை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். இது போன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்