திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மறுகால் குறிச்சி கிராமத்தினை பூர்வீகமாக கொண்டு தற்போது பட்டர்பிளை புதூர் கிராமத்தில் வசித்து வரும் முத்தையா மகன் வானுமாமலை (21). என்பவர் சட்டவிரோதமான செயல் புரிவதற்காக அபாயகரமான ஆயுதங்கள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் , காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஆயுதங்களுடன் அவரை கைது செய்தனர்.
வானுமாமலை மீது கடந்த 2024 ஆம் ஆண்டில் நாங்குநேரி அருகே நெடுஞ்சாலையில் கொள்ளை குற்றம் புரிந்தது தொடர்பாக வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு அபாயகரமான ஆயுதங்களை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இத்தகைய நபர்களுக்கு ஆதரவாகவும் காவல்துறைக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவது, குற்றவாளிகளை ஊக்குவிப்பது, போன்றவை சமூகத்திற்கு எதிரான செயலாகும். எனவே, பொறுப்புள்ள அமைப்பினைச் சார்ந்த நபர்கள், இத்தகைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படாமல், பொது அமைதியை பாதுகாத்து வரும் காவல்துறை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்