திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பாரதிபுரம் மணிநகர் அருகே முட்புதர் பகுதியில் வழிப்பறி செய்வதற்காக கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த பாரதிபுரம் பகுதியை சேர்ந்த துரை மகன் நாகராஜ்(28). என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா