திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், களக்காடு அருகே சிங்கிகுளம் காட்டுப் பகுதியில் சிலர் ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாகக் கிடைத்த தகவலின்பேரில், அங்கு சென்ற களக்காடு காவல்துறையினர் 6 பேரைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் நான்குனேரி மறுகால்குறிச்சி பகுதியைச் சேர்ந்த செல்லசாமி (30). விஸ்வநாதன் (28). சிங்கிகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துபாலன் (30).திருக்குறுங்குடி நம்பித்தலைவன்பட்டயத்தைச் சேர்ந்த இசக்கிதுரை (32). தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தை அடுத்த காரசேரியைச் சேர்ந்த உய்க்காட்டான் (25). இசக்கிபாண்டி (26). என்பதும், சதித் திட்டம் தீட்டுவதற்காக கூடியிருந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 3 அரிவாள்கள், கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். அவர்களில் 4 பேர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக, பெரிய வந்துள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்