திண்டுக்கல் : ஆயக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சமூக விரோத செயல்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்த ஆயக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஆனந்த் அவர்கள் மற்றும் உடன் பணியாற்றிய காவலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனி டி.எஸ்.பி திரு. தனஞ்ஜெயன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், பழைய ஆயக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தது சமூகத்தை பாதுகாக்கும் காவல் துறையின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.
இத்தகைய நடவடிக்கைகள் இளைஞர்களை தவறான பாதையிலிருந்து காக்கவும், ஆயக்குடி பகுதியை பாதுகாப்பான இடமாக மாற்றவும் பெரும் பங்கு வகிக்கின்றன. சட்டம் ஒழுங்கை காக்கும் காவல் துறையின் இந்தச் சிறப்பான செயல்பாடு தொடர வாழ்த்துகிறோம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















