தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது அந்தரங்க வீடியோ தனது பகுதியில் உள்ள அனைவருக்கும் பரவி வருவதாகவும், இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தி இதை பரப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் இப் புகாரை உரிய விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பொறுப்பு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் அவர்களின் தலைமையில் காவல் ஆய்வாளர் திருமதி.வசந்தி, சார்பு ஆய்வாளர்கள் திருமதி.சிவசங்கரி, திருமதி.செண்பகபிரியா, சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.தனசேகரன் மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு பெண்ணின் ஆபாச வீடியோவை எடுத்த ஐந்தாங்கட்டளை நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் ஜெயராஜ்(33). மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் பரப்பிய ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்த பவுல் அருணாச்சலம் என்பவரின் மகன் சக்தி அருள் (28). ஆகிய இரண்டு நபர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் கூறுகையில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தல் அதற்கு துணை போதல் மற்றும் அவற்றை வாட்ஸ் அப் போன்ற பிற இணையதளங்களில் பகிர்தல் போன்ற எந்த செயலில் ஈடுபட்டாலும் அவை அனைத்தும் குற்றமாகும் என்றும் இச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.