புதுக்கோட்டை: புதுக்கோட்டை டி.வி.எஸ்., கார்னர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்தவர் வணிகவியல் ஆசிரியர் சண்முகநாதன் 48. இவர், அப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவியிடம் அலைபேசியில் ஆபாசமாக பேசி உள்ளார்.
புதுக்கோட்டை டவுன் போலீசார் நேற்று முன்தினம் இரவு சண்முகநாதனை, ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர். அவர் நேற்று காலை தனக்கு நெஞ்சுவலி எனக்கூறியதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனைக்கு பின் நேற்று மதியம் புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி திருமதி சத்யா உத்தரவுப்படி, திருமயம் கிளைச் சிறையில் சண்முகநாதன் அடைக்கப்பட்டார்.