திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியை ஆபாச புகைப்படத்தை காட்டி மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த அம்பிளிக்கை தேவத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி(60) மற்றும் கனகராஜ் (60), ஆகிய இருவரையும் போக்சோ வழக்கில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.முத்துலட்சுமி அவர்கள், நீதிமன்ற முதல் நிலை காவலர் திருமதி.கார்த்திகை வேணி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி. அமுதா அவர்களின் சீரிய முயற்சியால் (30.06.2023)-ம் தேதி திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி மணி என்பவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.4,500/- அபராதமும், மற்றொரு குற்றவாளியான கனகராஜ் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.2,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா