தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் ஆபாசமாக பேசியும், புகைப்படங்கள் அனுப்பியும் பாலியல் தொந்தரவு செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
தீவிர விசாரணை மேற்கொண்டதில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் செல்போனில் ஆபாசமான வார்த்தைகளில் பேசியும், புகைப்படங்கள் அனுப்பியும் பாலியல் தொந்தரவு செய்து வந்தவர் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த கொத்த வேலை செய்து வரும் செல்லப்பாண்டி மகன் கிருஷ்ணவேல் 32 என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர் இதுபோல பல பெண்களின் செல்போன் எண்களை எடுத்து, அவர்களது செல்போனில் அவர்களிடம் ஆபாசமான வார்த்தைகளில் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொழில் நுட்ப ரீதியாக ஆராய்ந்து இவர்தான் பாலியல் தொந்தரவு செய்தார் என கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.சிவசங்கரன் சைபர் குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொழில்நுட்ப ரீதியாக பல வழிமுறைகளை கையாண்டு கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்