திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரிடம் மர்ம நபர் ஆன்லைன் மூலம் மோசடியாக பணம் ரூ.1,40,000/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் வழிகாட்டுதலின் படியும் திண்டுக்கல் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.சந்திரனின் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர்.மீனா மற்றும் திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.1,40,000/- பணத்தை மீட்டனர். இதனை அடுத்து (10.01.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் மீட்கப்பட்ட ரூ.1,40,000/- பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா