திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., ஆன்லைன் பட்டாசு மோசடி பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில்
தற்பொழுது ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து பெறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. தீபாவளி பண்டிகையும் நெருங்குவதால் ஆன்லைனில் ஆஃபர் விலையில் பட்டாசு டெலிவரி என மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை காலத்தில் ஆன்லைன் மூலமாக குறைந்த விலை, மற்றும் ஆஃபர் விலையில் பட்டாசு என வரும் விளம்பரங்களை நம்பி அறிமுகமில்லாத நபர்களிடம் ஆர்டர் செய்தால் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விடுகின்றனர்.
இது போன்ற மோசடி வலைதளங்களில் Message வாயிலாக சலுகை விலை பட்டாசு என வரும் Link மற்றும் Apk File (App) ஆகியவற்றை தெரியாமல் Click செய்தால் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டும், வாட்ஸப் செயலி முழுவதுமாக Hack செய்யப்படும். எனவே, இணையவழியில் பட்டாசு வாங்கும் போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். Message வாயிலாக வரும் Link மற்றும் Apk file ஆகியவைகளை புறக்கணிக்க வேண்டும். Cash On Delivery (COD) என இருந்தால் மட்டுமே அதை பயன்படுத்தி பட்டாசு வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இது போன்ற சைபர் கிரைம் நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் www. cybercrime. gov.in மற்றும் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அழைத்து புகார் செய்யலாம் என கேட்டுக் கொண்டுள்ளார் .
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்