குமரி: சட்டவிரோதமாக ஆன்லைன் மூலம் ரெயில்வே டிக்கெட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக நாகர்கோவில் ரெயில்வே மத்திய பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல்கள் வந்தன.
தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.உபேந்திரகுமார் தலைமையில் ரெயில்வே போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஒரு கம்ப்யூட்டரை ஆய்வு செய்தபோது, அதில் ஆன்லைனில் பல்வேறு போலியான ரெயில்வே கணக்குகள் உருவாக்கி, அதன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்றது பணம் சம்பாதித்தது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து போலீசார், கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் ரமேசை கைது செய்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 40 ரயில்வே டிக்கெட்டை பறிமுதல் செய்தனர்