திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா அருகே உள்ளது இருங்குளம் காப்பு காடு. இது தமிழக-ஆந்திர எல்லையையொட்டிய தமிழகத்தை சேர்ந்த ஆள்நடமாட்டம் இல்லாத வனபகுதி ஆகும். இந்த காப்பு காட்டில் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை அருகே உள்ள நாகராஜபுரத்தை சேர்ந்த தருண் குமார் (20), என்பவர் கடந்த மாதம் 4-ந் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து காவல் ஆய்வாளர் திரு. அய்யனாரப்பன், தலை மையில், பாதிரிவேடு காவல் துறையினர் , வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தருண்குமாரை குடிபோதையில், நண்பர்கள் சிலர் வெட்டி கொலை செய்திருப்பது காவல் துறையினரின் விசாரணையில், தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தின் செல்போன் சிக்னல்களை வைத்து கொலையாளிகள் 9 பேரை காவல் துறையினர் , தேடிவந்தனர். இந்த நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக செதில்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மனேஷ் (22), மாநெல்லூரைச் சேர்ந்த குள்ளா என்கிற கவுதம் (24), மற்றும் (16), வயது சிறுவன் உள்பட 3 பேரை ஏற்கனவே பாதிரிவேடு காவல் துறையினர் , கைது செய்தனர். இந்த நிலையில், தற்போது 3 சிறுவர்களை பாதிரிவேடு காவல் துறையினர் , கைது செய்தனர். மேலும், 3 பேரை காவல் துறையினர் , தேடி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்