திண்டுக்கல் : நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக முழுவதுமாக மூடப்பட்டிருந்த நிலையில் வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 36 எருமை மாடுகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இந்த எருமை மாடுகள் ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் லாரியையும், எருமை மாடுகளையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.